புதன், 31 அக்டோபர், 2012

கபாலபதி ப்ராணாயாமம்


வசதியான ஆசனத்தில் உட்காரவும்.கைகளில் ஞானமுத்திரை இருக்கட்டும்.
நமக்கு எதிரே ஒரு விளக்கு இருப்பதாக கற்பனை செய்து கொண்டு இரண்டு நாசிகளின் வழியாக மட்டும் அவ்விளக்கை அணைக்க சுவாசத்தை வேகமாக வெளியிட வேண்டும்.
வயிற்றின் மையப்பகுதி உள்நோக்கி இழுக்க வேண்டும்.
சுவாசம் வெளியிடுவதை மட்டும் கவனம் கொள்ள வேண்டும்.
சுவாசம் உள்ளிழுத்தலை மறந்து விட வேண்டும்.
சுவாசத்தை மார்பு,நெஞ்சு பகுதியை பயன்படுத்தி வெளியிடாமல் வயிற்று பகுதியை உள்ளிழுத்தல் மூலம் வெளியிட வேண்டும்.
சுவாசம் வெளியிடும் போது தோள் பகுதி,தலை ஆடாமல் இருக்க வேண்டும்.
ஒரு வினாடிக்கு ஒரு முறை மூச்சை வெளியிட வேண்டும்.
5நிமிடம் முதல் 15நிமிடம் வரை செய்ய வேண்டும்.
அதிவேகமாக மூச்சை வெளியிடக்கூடாது.
சோர்வு ஏற்படும் தருணத்தில் இடையே சிறிது ஓய்வு எடுத்து கொள்ளலாம்.
ஆரம்ப காலங்களில் முதுகின் பின்புறமாகவும்,வயிற்று பகுதியிலும் வலி உணர்ந்தாலும் பயிற்சியை தொடர வேண்டும்.
முக்கிய கவனம்:
எதிர்மறை மற்றும் தீங்கு விளைவிக்கின்ற கோபம்,பேராசை,அகங்காரம், விலக்க முடியாத அடிமைப்பழக்கங்கள் காற்றோடு வெளியேறுவதாக நினைக்க வேண்டும்.

பலன்கள்:
முகம் ஒளிமிக்கதாகவும் வசீகர தன்மையுடனும் விளங்கும்.
ஆஸ்துமா,அலர்ஜி,நீர்கட்டு,அதிக பருமன்,சர்க்கரை வியாதி,மலச்சிக்கல், அமிலத்தன்மை,வாயுத்தொல்லை,சிறுநீரக வியாதிகள்,இதய அடைப்பு,     மன அழுத்தம்,பக்க வாதம்,நரம்பு சம்பந்தபட்ட வியாதிகள்,வெண்குஷ்டம், சோரியாசிஸ் போன்ற வியாதிகள் நீங்கி,குடலை வலுவாக்கி செரிமாணத்தை அதிகரிக்க செய்கிறது.
மூலவியாதி குணமடைகிறது.
உடல் எடை குறைக்கப்பட்டு மூட்டு வலி சரி செய்யப்படுகிறது.
கெட்ட நினைவுகள் அகன்று அமைதியான மனநிலை கிடைத்து நல்ல உறக்கம் கிடைக்கிறது.
முதிர்வுநிலை தள்ளப்பட்டு முடியின் நிறம் கருமையாக்கப்படுகிறது.
கண்பார்வை,நினைவாற்றல் மேம்படுகிறது.
சக்கரங்கள் தூய்மை படுத்தப்பட்டு பரந்த சக்தி கிடைக்கிறது.

செய்யக்கூடாதவர்கள்:
கர்ப்பிணி தாய்மார்கள்,பெண்கள் மாதவிலக்கு நேரங்களிலும்,6மாதங்களுக்குள் அறுவை சிகிச்சை செய்தவர்கள் செய்யக்கூடாது.
இரத்த அழுத்தம்,இதய நோய் உள்ளவர்கள் ஆசிரியரின் மேற்பார்வையில் செய்ய வேண்டும்.

குறிப்பு:
அதிகபசி,ஜுரம்,தூக்கமின்மை,மன உளைச்சல் சமயங்களில் செய்யக்கூடாது.

ஞாயிறு, 14 அக்டோபர், 2012

பஸ்திரிகா ப்ராணாயாமம்


  • வசதியான ஆசனத்தில் உட்காரவும்.இரண்டு நாசிகள் வழியாக பலமாக நுரையீரல் நிரம்பும் வரை சுவாசிக்கவும்.கைகளில் ஞானமுத்திரை இருக்கட்டும்.
  • வயிற்றுப்பகுதி வீங்கா வண்ணம் சுவாசிக்க வேண்டும்.
  • 2 நிமிடம் முதல் 5 நிமிடம் வரை செய்யலாம்.
  • சுவாசம் செய்யும் போது ‘ஓம்என்ற மந்திரத்தை நினைக்கவும்.
  • சோர்வு அடையும் வரை இரண்டு நாசிகள் வழியாக காற்றை உள்ளே இழுத்து வெளிவிட வேண்டும்.






பலன்கள்:
  • அனைத்து வகை சுவாச நோய்களான சளி,இருமல்,ஒவ்வாமை சரி செய்யப்படுகின்றன.
  • இதயம்,நுரையீரல்,மூளைக்கு அதிக ப்ராணன் கிடைப்பதால் அவைகள் திடமாகி நோய் எதிர்ப்பு திறனை பெறுகின்றன.
  • தொண்டை சம்மந்தப்பட்ட தைராய்டு,டான்சில் நோய்கள் குணமடைகின்றன.
  • வாதம்,பித்தம்,கபம் இவைகள் சமன் செய்யப்படுகின்றன.
  • மனதை அமைதிப்படுத்தி மூலாதாரத்திலிருந்து குண்டலினி சக்தியை எழுப்ப உதவுகிறது.






செய்யக்கூடாதவர்கள்:
  • உயர் இரத்த அழுத்தம்,இதய நோய் இருப்பவர்கள் செய்யக்கூடாது.