சனி, 25 ஜூலை, 2020

குறை ஒன்றும் இல்லை... மறைமூர்த்திக் கண்ணா...

நிறை அனைத்தும் தந்தாய் நீதானே இறைவா

நிறை அனைத்தும் தருகிறாய் இறைவா

நிறை அனைத்தும் தருவாய் பேரிறைவா

நிறை அனைத்தும் தந்தாய் நீதானே இறைவா

நிறை அனைத்தும் தருகிறாய் இறைவா

நிறை அனைத்தும் தருவாய் பேரிறைவா

நீக்கமற எங்கெங்கும் நிறைகிறாய் இறைவா

ஆக்கமுறு என்செயல்கள் யாவிலும் துணைநின்று

நிறை அனைத்தும் தந்தாய் நீதானே இறைவா

நாடுவது வேண்டுமென்றால் நாடுவதே தீர்வு அன்றோ

என்னுடைய நாட்டம் எல்லாம் நீதானே இறைவா

பேரண்டம் பேராற்றல் பேரன்பின் ஓர்வடிவம் நீதானே பேரிறைவா

 

அங்கிங்கெனாதபடி எங்கெங்குமே இருக்கிறாய்

இறைவா அங்கிங்கெனாதபடி எங்கெங்குமே இருக்கிறாய் –உன்னை

மெய்ஞானம் தேடுவோர் யாவரும் அடைவார்

அங்கிங்கெனாதபடி எங்கெங்குமே இருக்கிறாய் –உன்னை

மெய்ஞானம் தேடுவோர் யாவரும் அடைவார்

உனக்காக எதை நான் தருவேன் இறைவா

உனக்காக எதை நான் தருவேன் இறைவா

வேண்டுவதை வேண்டுவோர்க்கு தருகின்றாய் வரமாய்

வேண்டுவதை வேண்டுவோர்க்கு தருகின்றாய் வரமாய்

நிறைஅனைத்தும் தந்தாய் நீதானே இறைவா

நிறை அனைத்தும் தந்தாய் நீதானே இறைவா

பேரண்டம் பேராற்றல் பேரன்பின் ஓர்வடிவம் நீதானே பேரிறைவா

 

வானாக இருப்பதறிய செவியினைப் படைத்து

வளியாக இருப்பதறிய மெய்யினைப் படைத்தாய் இறைவா

நீராக இருப்பதறிய நாக்கினைப் படைத்து

நிலமாக இருப்பதறிய மூக்கினைப் படைத்தாய் இறைவா

கனலாக இருப்பதறிய கண்களைப் படைத்தாய்

யாதும் நீயாகிய பேரிறைவா

யாதும் நீயாகிய பேரிறைவா-எதை நானறிய

ஆறாம் அறிவாகிய மனதைப் படைத்து வைத்தாய்?

மனதை அடக்க ஏது வழி எனக்கு?

மனதை அடக்க ஏது வழி எனக்கு?

அனைத்தும் நிறைவாக தந்தாய் இறைவா

அனைத்தும் நிறைவாக தந்தாய் இறைவா

பேரண்டம் பேராற்றல் பேரன்பின் ஓர்வடிவம் நீதானே பேரிறைவா

பேரன்பின் ஓர்வடிவம் நீதானே பேரிறைவா...

 -கு.சீனுவாசன்

வாழ்த்துக் கவிதை

ஓம் என்ற வானின் ஒலியை 
உம் செவிகள் கேட்டு இன்புறட்டும்!

வெளிச்சமான கதிரவன் ஒளியை
உம் கண்கள் பார்த்து களிப்புறட்டும்!

தூய்மையான தென்றல் காற்று
உம் மெய்யில் நுழைந்து வருடட்டும்!

சுவையான தீஞ்சுவைக் குடிநீர்
உம் நாவில் தாகம் தீர்க்கட்டும்!

பூத்துக் குலுங்கும் சோலைநிலம்
உம் மூக்கில் வாசம் சேர்க்கட்டும்!

பேரண்டம் பேராற்றல் பேரன்பு
உம் வாழ்வின் ஆயுளைக் கூட்டட்டும்!

அன்புடன்,

கு.சீனுவாசன்...

வெள்ளி, 31 ஆகஸ்ட், 2018

மனதாரா வாழ்த்துங்கள்

மனதாரா வாழ்த்துங்கள் இது இவரின் முதல் விருது ....இந்த ஆசிரியையின் பெயர் க.சங்கீதா .ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியையாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பொய்யப்பாக்கம் அரசு உயர்நிலைப்பள்ளியில் பணிபுரிந்து வருகிறார்!
கற்பித்தலில் புதுமை விரும்பியான இவர் ஆங்கில இலக்கணத்தை ஆர்வமூட்டும் வகையில் போரடிக்காமல் பாட்டு மூலமாகவே கற்பித்துவருகிறார்!
ஆங்கிலத்தில் PARTS OF SPEECH மற்றும் TENSE போன்றவற்றை சொந்த நடையில் பாடல் இயற்றி அவற்றின் மூலம் கற்பிப்பதோடு எல்லாத்தலைப்புகளுக்கும் முயற்சிப்பது இவரது சிறப்பு!
தன்னுடைய மாணவர்கள் மட்டுமல்லாது பிற மாணவர்களும் ஆசிரியர்களும் பயன் பெறும் வகையில் தன்னுடைய படைப்பாற்றல் திறனை சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்கிறார்!
2012ஆம் ஆண்டு டெட் TET (TEACHERS ELIGIBILITY TEST) மூலம் ஆசிரியப் பணிக்கு தேர்வாகி வந்த இவர், தான் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை சமூக அறிவியல் பாடத்திற்காக தயாரித்து படித்த ஆடியோ மெட்டீரியல்களை இலவசமாக பிறரும் பயன்படுத்தும் வண்ணம் பிளாக்கர்(BLOGGER) எனப்படும் சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டதால் பார்வையற்றோர் முதல் போட்டித் தேர்வுக்கு தயாராவோர் வரை இலவசப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி பலன் அடைந்துள்ளனர்!
ஆங்கிலம் மட்டுமல்லாது மாணவர்கள் தமிழைத் தவறின்றி எழுதவும் உச்சரிக்கவும் வேண்டும் என்ற நோக்கத்தில் ப்ளாஷ் அனிமேஷன் முறையில் தயாரிக்கப்பட்ட எழுதிப்படிப்போம் வாங்க என்ற குறுந்தகட்டில் தமிழ் எழுத்துகளை அழகாக உச்சரிப்பு செய்து தம் பங்கினை சிறப்பாக ஆற்றியுள்ளார்!
பள்ளி விழாக்களில் சினிமா மெட்டுகளில் சொந்த வரிகளைக் கொண்டு பாடல் எழுதி மாணவர்களைப் பாட வைப்பதோடு ஆர்வமுடன் அவர்களை கலை நிகழ்ச்சிகளில் பங்கெடுக்க வைக்கின்றார்!
தொடக்கநிலை வகுப்புகளுக்கான அடிப்படைக்கணிதம் என்னும் வீடியோ வகுப்புகளுக்கு எண்கள்,கூட்டல்,கழித்தல்,பெருக்கல்,வகுத்தல்,பின்னம்,அளவைகள் மற்றும் வடிவியல் ஆகிய எட்டுப் பாடங்களுக்கும் சிறப்பான அறிமுக உரையை வழங்கியதோடு மட்டுமல்லாமல் உதவி இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார்! இவரின் பின்னம் பாடல் நடிப்பு பலராலும் பாராட்டுப் பெற்ற ஒன்றாகும்!
கணக்கு செய்து கற்போம் வாங்க! என்னும் முகநூல் பக்கத்தில் உள்ள பெரும்பாலான வீடியோக்களுக்கு BACKGROUND VOICE கொடுத்து கணிதத்தை மாணவர்களிடம் எளிதாகக் கொண்டு சேர்க்க உதவி வருகிறார்!
ப்ளாஷ் அனிமேஷன் முறையில் தயாரிக்கப்பட்ட வாய்ப்பாடு குறுந்தகடு 20x20 வாய்ப்பாட்டை எளிமையாக படிக்கத்தூண்டும் வகையில் இவரின் பின்னணிக்குரலில் இலவச பதிவிறக்க வசதியோடு வெளியிடப் பட்டுள்ளது!
கணினி பிரித்துப் பூட்டலாம் வாங்க! என்னும் முகநூல் பக்கத்தில் ஹார்டுவேர் அசம்பிளிங் செய்வது எப்படி என்ற வீடியோவும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இன்ஸ்டால் செய்வது எப்படி என்ற வீடியோவும் இவராலேயே மிகப் பிரபலம் அடைந்தன!
டிசைன் பார் சேஞ்ச் என்ற போட்டிக்காக பள்ளியிலே மரக்கன்றுகளை பாதுகாப்பாக நட்டு வளர்த்ததும், பயன்படுத்திய ஏ4 தாள்களை மீள் சுழற்சி முறையில் பிரிண்ட் எடுக்கப் பயன்படுத்தியதும் பள்ளி அளவில் மாணவர்களால் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது!
இவ்வாசிரியரின் முயற்சிகளைப் பாராட்டி மேலும் அவர்களை ஊக்கப் படுத்தும் விதமாக கனிந்த இதயங்கள் அமைப்பின் சார்பில் திருமதி. Shyamala Krishnamoorthy அம்மா ஆசிர்வாத்த்துடன்.. இவ்விருது வழங்கப்படுகிறது!
மெல்லக்கற்போரை இலக்காக வைத்து அவர்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டுவரும் இவ்வாசிரியையை
ஆசிரியர் தினத்தில் நீங்களும் பாராட்டலாமே…(இந்த ஆசிரியையின் ஒரு சில வீடியோ இணைத்துள்ளேன்)
K.SANGEETHA M.A.M.Phil.(ENG), M.A.(ECO), B.Ed.,
B.T.ASSISTANT (ENG),
GOVERNMENT HIGH SCHOOL, POYYAPAKKAM,
VILLUPURAM DISTRICT – 605103

செவ்வாய், 6 ஜூன், 2017

அரசுப்பள்ளி...


பல்லவி
அன்னா ஆவன்னா சொல்லிக் கொடுத்தது அரசுப் பள்ளிதான்
எங்கள் அணு விஞ்ஞானி அப்துல் கலாமும் அரசுப் பள்ளிதான்
அன்னா ஆவன்னா சொல்லிக் கொடுத்தது அரசுப் பள்ளிதான்
எங்கள் அணு விஞ்ஞானி அப்துல் கலாமும் அரசுப் பள்ளிதான்
உணவைத் தந்ததும் இப்பள்ளிதான்
உடையைத் தந்ததும் இப்பள்ளிதான்
உணவைத் தந்ததும் இப்பள்ளிதான்
உடையைத் தந்ததும் இப்பள்ளிதான்
குப்பனும் சுப்பனும் படித்து வளர்ந்தது அரசுப் பள்ளிதான்
அட சாதியும் பேதமும் இல்லாத ஓரிடம் அரசுப் பள்ளிதான்
குப்பனும் சுப்பனும் படித்து வளர்ந்தது அரசுப் பள்ளிதான்
அட சாதியும் பேதமும் இல்லாத ஓரிடம் அரசுப் பள்ளிதான்
சரணம்-1
கையிலே காசில்லா
ஏழைங்க யாரும்
படிப்பதெப்படி சொல்லுங்க நீங்க
அரசுப்பள்ளி வாசலையே மிதித்துவிட்டால் போதும்
அத்தனையும் இலவசம்தான் வாங்க
கட்டணக் கொள்ளை
 மனப்பாடத் தொல்லை
 தனியார்ப் பள்ளியில்
நிறைஞ்சிருக்கு
அரசுப் பள்ளி
 இருப்பதால் தானே
அனைவருக்கும் கல்வி
கிடைச்சிருக்கு
அட பள்ளிக்கூடம் வரமாச்சு படிப்பெல்லாம் உரமாச்சு
அரசுப்பள்ளி யாலே மாணவர்
வாழ்க்கை தரமாச்சு
அட அரசுப்பள்ளி யாலே மாணவர் வாழ்க்கை தரமாச்சு!
சரணம்-2
ஏகப்பட்ட தன்னலமற்ற
நாட்டுப்பற்று இளைஞர்கள்
அரசுப்பள்ளி கொடுத்தது உண்மை
அரசுப்பள்ளி இருந்ததால்தான்
அடுப்படியைத் தாண்டி
புத்தகத்தை ஏந்தியது பெண்மை
இரவு பகல் உழைத்து
 காசு பணம் சேர்த்து
 தனியாரில் சேர்ப்பது
நட்டமுங்க
வாழ்க்கைக்கு இங்கே
 தன்னம்பிக்கை வேணும்
 அரசுப் பள்ளியே
கொடுக்குமுங்க
கல்வி நமது உரிமையாகும்
 கேட்டுப் பெறுவது கடமையாகும்
தனியார் பள்ளியில்
தண்டம் அழுவது
 நமது மடமையாகும்
அட தனியார் பள்ளியில்
தண்டம் அழுவது
 நமது மடமையாகும்!
-கு.சீனுவாசன் ப.ஆ

இந்திரன் வந்ததும் சந்திரன் வந்ததும் இந்த சினிமாதான்...பாடல் மெட்டு

செவ்வாய், 22 மார்ச், 2016

மெட்டுப்பாடல்-37

தமிழ்த்தாயை அழைக்காத வாயில்லையே!
தமிழ்த்தாயை அழைக்காது வாழ்வில்லையே!
இன்றும் என்றும் தமிழ்ப்போல
பொன்றா புகழ்க்கொண்ட வேற்று மொழி ஏது?

சங்கங்கள் வளர்த்தவள் நீ சிந்தையிலே நிறைந்தவள் நீ
காப்பியனை ஈன்றவளும் நீதானம்மா
அன்புடைய அகத்தாள் நீ போருடைய புறத்தாள் நீ
உலகத்தின் பொதுமறையே நீதானம்மா
காவியங்கள் கொண்டவள் நீ கணினியையும் கண்டவள் நீ
தீதும் நன்றும் உரைத்தவளே நீதானம்மா
செம்மொழியாய் ஆனவள் நீ மின்மொழியாய் ஆனவள் நீ
உலகத்தின் முதல் மொழியே நீதானம்மா
உன்னாலே வளர்ந்தோமே!

எழுத்தும் நீ சொல்லும் நீ பொருளும் நீ யாப்பும் நீ
அணியோடு அழகாக இருக்கின்றாய் நீ
மேகலை நீ சிலம்பும் நீ வளையும் நீ குண்டலம் நீ
மணியோடு காப்பியமாய் இருக்கின்றாய் நீ
அமுதாக இயலோடும் இசையோடும் நாடகத்தை
இப்போதும் தந்தபடி இருக்கின்றாய் நீ
அறத்துக்கும் பொருளுக்கும் மகிழ்வுக்கும் அலங்காரம்
எப்போதும் செய்தபடி இருக்கின்றாய் நீ
உன்னாலே சிறந்தோமே!
(அம்மா என்றழைக்காத உயிரில்லையே என்ற பாடல் மெட்டு)