வியாழன், 31 அக்டோபர், 2013

ஏழாம்வகுப்பு-ஏர்முனை

ஏழாம்வகுப்பு-மெய்ப்பொருள்கல்வி

ஏழாம்வகுப்பு-திரிகடுகம்

சனி, 26 அக்டோபர், 2013

எட்டாம்வகுப்பு-விழுதும் வேரும்

எட்டாம்வகுப்பு-கம்பராமாயணம்

வெள்ளி, 25 அக்டோபர், 2013

எட்டாம்வகுப்பு-தேம்பாவணி

எட்டாம்வகுப்பு-திருமந்திரம்

புதன், 23 அக்டோபர், 2013

எட்டாம்வகுப்பு-விவேக சிந்தாமணி

ஞாயிறு, 20 அக்டோபர், 2013

சதுரங்க போட்டிக்கான மென்பொருள்

சதுரங்கப் போட்டியினை நடத்துவதற்கான மென்பொருளை பதிவிறக்கம் செய்து கொள்வதற்கான இணைப்பு.http://www.mediafire.com/download/n0vqri3wai898ea/sp98.rar

சனி, 19 அக்டோபர், 2013

சதுரங்க விதிமுறைகள்

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

சதுரங்க விதிமுறைகளை அறிய மேலே உள்ள இணைப்பை சொடுக்கி பயன் பெறுக.

ஞாயிறு, 13 அக்டோபர், 2013

நாங்கள் பிறந்த பொன்னாடே!


Land of our Birth, we pledge to thee
Our love and toil in the years to be;
When we are grown and take our place
As men and women with our race.

Father in Heaven who lovest all,
Oh, help Thy children when they call;
That they may build from age to age
An undefiled heritage.

Teach us the Strength that cannot seek,
By deed or thought, to hurt the weak;
That, under Thee, we may possess
Man's strength to comfort man's distress.

Teach us Delight in simple things,
And Mirth that has no bitter springs;
Forgiveness free of evil done,
And Love to all men 'neath the sun!

Land of our Birth, our faith, our pride,
For whose dear sake our fathers died;
Oh, Motherland, we pledge to thee
Head, heart and hand through the years to be!

-Rudyard kipling

நாங்கள் பிறந்த பொன்னாடே
உனக்கு எங்கள் உறுதிமொழி
இளைஞர்கள் யுவதிகளாய்
நாங்கள் வளர்வதே உனக்காக!
இனிவரும் காலங்களில்
எங்கள் இடத்தை அடைகையிலே
எங்கள் நேசம் எங்கள் உழைப்பு
அனைத்துமே உனக்காக!

விண்ணில் இருந்தபடி
மண்ணை அன்பால் ஆள்பவனே
புனிதம் மிக்கதன்றோ
எம்நாட்டின் பாரம்பரியம்!
தலைமுறை தலைமுறையாய்
அதைக் கட்டிக்காத்திடவே
உமது குழந்தைகள் அழைக்கையிலே
நீ ஓடிவந்து உதவிபுரி!

எண்ணம் செயல் இரண்டாலும்
எங்களது பலத்தை கொண்டு
எளியோரை வதம் செய்யாமல்
நாங்கள் இருந்திட கற்றுக்கொடு!
மனிதர்களின் துன்பங்களை
துடைத்து போக்கி விட்டு
அவர்களுக்கு ஆறுதலாய்
நாங்கள் இருந்திட கற்றுக்கொடு!

எளிமையான செயல்களிலும்
ஏராளமாய் இன்பம் கொடு!
கசப்பான உணர்வுகளை
தூண்டாத களிப்பைக் கொடு!
பிறர் செய்யும் கெடுதல்களை
மன்னிக்கின்ற பக்குவம் கொடு
உலகிலுள்ள அனைவரையும்
நேசிக்கின்ற உள்ளம் கொடு!

நாங்கள் பிறந்த பொன்னாடே
உம் கீர்த்தியைக் காத்திடவே 
எம்முடைய முன்னோர்கள்
தம்முடைய உயிரும் தந்தனர்!
எங்களது தாய்நாடே
உனக்கு எங்கள் உறுதிமொழி
தலை முதல் பாதம் வரை
அனைத்துமே உனக்காக!

-ருட்யார்டு கிப்ளிங்.

வியாழன், 10 அக்டோபர், 2013

கீதாஞ்சலி

WHERE THE MIND IS WITHOUT FEAR
Where the mind is without fear and the head is held high;
Where knowledge is free;
Where the world has not been broken up into fragments by narrow domestic walls;
Where words come out from the depth of truth;
Where tireless striving stretches its arms towards perfection;
Where the clear stream of reason has not lost its way into the dreary desert sand of dead habit;
Where the mind is led forward by thee into ever-widening thought and action
Into that heaven of freedom, my Father, let my country awake.

-Rabindranath Tagore
மனம் அச்சமின்றி தலைநிமிர்ந்து
எங்கு நிற்குமோ…
அந்த சுதந்திர சொர்க்கத்திற்கு என்நாடு
விழித்துச் செல்ல வேண்டும் தந்தையே!

கல்வி இலவசமாய் அனைவருக்கும்
எங்கு கிடைக்குமோ…
அந்த சுதந்திர சொர்க்கத்திற்கு என்நாடு
விழித்துச் செல்ல வேண்டும் தந்தையே!

உலகம் பூசல்களால் பிரியாமல்
எங்கு உள்ளதோ…
அந்த சுதந்திர சொர்க்கத்திற்கு என்நாடு
விழித்துச் செல்ல வேண்டும் தந்தையே!

சொற்கள் உண்மையின் அடிப்படையில்
எங்கு தோன்றுமோ…
அந்த சுதந்திர சொர்க்கத்திற்கு என்நாடு
விழித்துச் செல்ல வேண்டும் தந்தையே!

விடாமுயற்சி திருத்தம் நோக்கி
எங்கு செல்லுமோ…
அந்த சுதந்திர சொர்க்கத்திற்கு என்நாடு
விழித்துச் செல்ல வேண்டும் தந்தையே!

சிந்தனையோடை பழக்கத்தினால் தொலையாமல்
எங்கு ஓடுமோ…
அந்த சுதந்திர சொர்க்கத்திற்கு என்நாடு
விழித்துச் செல்ல வேண்டும் தந்தையே!

உள்ளத்தை விரிந்துபரந்த எண்ணம்செயல்
எங்கு நடத்துமோ…
அந்த சுதந்திர சொர்க்கத்திற்கு என்நாடு
விழித்துச் செல்ல வேண்டும் தந்தையே!
-மகாகவி இரவீந்திரநாத தாகூர்.

சதுரங்கம் ஆடுவோமா?-1

http://wtharvey.com/

நீண்ட நாட்களாகவே சதுரங்கம் குறித்தான ஒரு பதிவை இட வேண்டும் என்று எண்ணி இருந்தேன். ஏற்கனவே சதுரங்கம் விளையாடத் தெரிந்தவர்கள் மேலே உள்ள இணைப்பை சொடுக்கி பயன் பெறுக.

புதன், 2 அக்டோபர், 2013

தமிழ்த்தாய் வாழ்த்து

தமிழை அரியணை ஏற்றிடுவோம்-அதன்
தொன்மையை நாளும் போற்றிடுவோம்!
மூச்சென தமிழ்ப்பணி ஆற்றிடுவோம்-அதை
முயற்சிக்க மறந்தால் தோற்றிடுவோம்!

ஆயிரமாயிரம் மொழிகள் இருப்பினும்
தமிழின் அழகுக்கு ஈடுஇல்லை!
அன்னைத் தமிழுக்கீடாய் எவரும் கொடுத்திட
உலகில் எதுவும் வேறுஇல்லை!

அவள் கால்கள் கடந்து போகும் பாதை
அது முடிவேயின்றி இன்னும் நீளட்டுமே!
இந்த மண்ணில் முத்தமிழ் என்றென்றுமே
நித்தம் நிலைபெற்று நம்மை ஆளட்டுமே!

சங்கங்கள் வளர்த்தவள் வாழியவே!
சிந்தையில் நிறைந்தவள் வாழியவே!
அன்புடை அகத்தாள் வாழியவே!
போருடை புறத்தாள் வாழியவே!
அவள் கால்கள் கடந்து போகும் பாதை
அது முடிவேயின்றி இன்னும் நீளட்டுமே!
இந்த மண்ணில் முத்தமிழ் என்றென்றுமே
நித்தம் நிலைபெற்று நம்மை ஆளட்டுமே!

காப்பியம் கொண்டவள் வாழியவே!
கணினியை கண்டவள் வாழியவே!
செம்மொழி ஆனவள் வாழியவே!
மின்மொழி ஆனவள் வாழியவே!                  
அவள் கால்கள் கடந்து போகும் பாதை
அது முடிவேயின்றி இன்னும் நீளட்டுமே!
இந்த மண்ணில் முத்தமிழ் என்றென்றுமே
நித்தம் நிலைபெற்று நம்மை ஆளட்டுமே!

(ஆனந்த யாழை மீட்டுகிறாய்-தங்க மீன்கள் பாடல் மெட்டு)