ஞாயிறு, 31 மார்ச், 2013

துணிந்துரைத்தல்

வாழ்க்கை ஒரு புல்லாங்குழல்
வாசிக்கத்தான் நேரம் இல்லை!
பணமே வாழ்க்கை என்றால்
ஆடிப்பாட நேரம் ஏது ?
நாம் மனதைக் கட்டுப்படுத்தும்
மந்திரத்தை அறிந்து கொண்டு
மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வோம்!

எவரெஸ்டு சிகரம் கூட
எட்டுகின்ற உயரம் ஆச்சே!
நீயும் நானும் கூட
நிலவுக்கே போய் வரலாம்!
நாம் வெற்றிக் கொடி நட்டு
பேரை நிலை நாட்டி
இன்னும்பல சாதனை செய்வோம்!

தீயோரை காண்பதுவும்
தீயோர் சொல் கேட்பதுவும்
தீமை தானே தரும்!
வேறென்ன நன்மை வரும்?
நாம் கெட்ட நோக்கோடு
தொட்டுப்பேசும் கயவரை
எட்டிமிதிக்க கற்றுக் கொள்வோம்!

முதுகுக்கு பின்னால் நின்று
செய்யும் செயல் ஒன்றே ஒன்று!
அதை நான் சொல்வேன் இன்று!
காது கொடுத்து கேட்டால் நன்று!
நாம் வஞ்சக எண்ணமின்றி
வளர்ந்திட வாழ்த்துச் சொல்லி
தட்டிக்கொடுக்க பழகிக் கொள்வோம்!

நட்புக்கு எல்லை இல்லை
நாடு தாண்டி விரியட்டுமே!
முகநூல் மூலம் கூட
கைகள் குலுக்கலாமே!
நாம் அறிமுகமே இல்லாத
நபர்களோடு பழகும் போது
எச்சரிக்கை அதிகம் கொள்வோம்!

திங்கள், 25 மார்ச், 2013

தன்னையறிதல்

யானை பலம் தும்பிக்கை
மனித பலம் தன்னம்பிக்கை!
கேலி கிண்டல் கண்டு
தன்னம்பிக்கை
தூளாவதா?
நாம் தன்னம்பிக்கை தளராமல்
முயற்சியோடு
பயிற்சி செய்து
முன்னேறிக் காட்ட வேண்டும்!

மரியாதை தரும் பழக்கம்
தமிழருக்கு குல வழக்கம்!
இதற்கு ஏன் சுணக்கம்?
இருகை கூப்பி வைப்போம் வணக்கம்!
நாம் அன்னை தந்தை மட்டுமின்றி
ஆசான் இறைவன் மட்டுமின்றி
மாற்றாரிடமும் கொள்வோம் இணக்கம்!

தனித்தன்மை இல்லா மனிதன்
உலகினிலே யாரும் இல்லை!
உள்ளத்தின் ஒருமைப்பாட்டில்
ஒளிந்துள்ளது வெற்றியின் சாவி!
நாம் தன்திறமை அறிந்து கொண்டால்
தவறுகளை திருத்திக் கொண்டால்
வெற்றி மேல் வெற்றி வரும்!

நொடிப்பொழுதும் வீணாக்காமல்
நேர்மையாக உழைத்துப் பாரு!
உழைத்து பார்க்கும் போது
தலை தானாய் நிமிரும் பாரு!
நாம் சூழலுக்கு ஏற்றாற் போல்
நேர்மறையாய் முடிவெடுத்தால்
தோல்வி தூர ஓடும் பாரு!

நமக்கு எது பிடிக்குமென்று
நமக்குத்தானே நன்றாய் தெரியும்!
பிடித்ததை விடாப்பிடியாய்
பிடித்துக் கொண்டாலே வெற்றி வரும்!
நாம் வெற்றி அடைந்தாலும்
தோல்வி அடைந்தாலும்
சுயமுடிவு எடுத்திட வேண்டும்!

ஞாயிறு, 24 மார்ச், 2013

வாய்ப்பாடு-18

அதே ரொம்ப ரொம்ப முக்கியமான ஒரு ஐடியாவை மீண்டும் பார்க்க போறோம்! 11லிருந்து 19 வரைக்கும் எந்த இரண்டு எண்களைக் கொடுத்தாலும் மனசிலேயே கணக்கு போட்டு சொல்லும் ஐடியா அது!

1.   10×10=100 மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

2.   கடைசி இலக்கங்களைக் கூட்டி உடன் பூஜ்ஜியத்தை சேர்க்க வேண்டும்!

3.   கடைசி இலக்கங்களை மட்டும் பெருக்கி கொள்ள வேண்டும்!

4.   மூன்று விடைகளையும் கூட்ட வேண்டும்! அவ்வளவுதான்!
1×18=18(18×1=18)
2×18=36(18×2=36)
3×18=54(18×3=54)
4×18=72(18×4=72)
5×18=90(18×5=90)
6×18=108(18×6=108)
7×18=126(18×7=126)
8×18=144(18×8=144)
9×18=162(18×9=162)
10×18=180(18×10=180)
11×18=198(100+90+8)
12×18=216(100+100+16)
13×18=234(100+110+24)
14×18=252(100+120+32)
15×18=270(100+130+40)
16×18=288(100+140+48)
17×18=306(100+150+56)
18×18=324(100+160+64)
19×18=342(100+170+72)
20×18=360(18×20=360)  
என்ன பதினெட்டாம் வாய்ப்பாடு எளிமையாக இருக்கிறதா?

வாய்ப்பாடு-17

அதே ரொம்ப ரொம்ப முக்கியமான ஒரு ஐடியாவை மீண்டும் பார்க்க போறோம்! 11லிருந்து 19 வரைக்கும் எந்த இரண்டு எண்களைக் கொடுத்தாலும் மனசிலேயே கணக்கு போட்டு சொல்லும் ஐடியா அது!

1.   10×10=100 மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

2.   கடைசி இலக்கங்களைக் கூட்டி உடன் பூஜ்ஜியத்தை சேர்க்க வேண்டும்!

3.   கடைசி இலக்கங்களை மட்டும் பெருக்கி கொள்ள வேண்டும்!

4.   மூன்று விடைகளையும் கூட்ட வேண்டும்! அவ்வளவுதான்!
1×17=17(17×1=17)
2×17=34(17×2=34)
3×17=51(17×3=51)
4×17=68(17×4=68)
5×17=85(17×5=85)
6×17=102(17×6=102)
7×17=119(17×7=119)
8×17=136(17×8=136)
9×17=153(17×9=153)
10×17=170(17×10=170)
11×17=187(100+80+7)
12×17=204(100+90+14)
13×17=221(100+100+21)
14×17=238(100+110+28)
15×17=255(100+120+35)
16×17=272(100+130+42)
17×17=289(100+140+49)
18×17=306(100+150+56)
19×17=323(100+160+63)
20×17=340(17×20=340)  
என்ன பதினேழாம் வாய்ப்பாடு எளிமையாக இருக்கிறதா?

வாய்ப்பாடு-16

அதே ரொம்ப ரொம்ப முக்கியமான ஒரு ஐடியாவை மீண்டும் பார்க்க போறோம்! 11லிருந்து 19 வரைக்கும் எந்த இரண்டு எண்களைக் கொடுத்தாலும் மனசிலேயே கணக்கு போட்டு சொல்லும் ஐடியா அது!

1.   10×10=100 மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

2.   கடைசி இலக்கங்களைக் கூட்டி உடன் பூஜ்ஜியத்தை சேர்க்க வேண்டும்!

3.   கடைசி இலக்கங்களை மட்டும் பெருக்கி கொள்ள வேண்டும்!

4.   மூன்று விடைகளையும் கூட்ட வேண்டும்! அவ்வளவுதான்!
1×16=16(16×1=16)
2×16=32(16×2=32)
3×16=48(16×3=48)
4×16=64(16×4=64)
5×16=80(16×5=80)
6×16=96(16×6=96)
7×16=112(16×7=112)
8×16=128(16×8=128)
9×16=144(16×9=144)
10×16=160(16×10=160)
11×16=176(100+70+6)
12×16=192(100+80+12)
13×16=208(100+90+18)
14×16=224(100+100+24)
15×16=240(100+110+30)
16×16=256(100+120+36)
17×16=272(100+130+42)
18×16=288(100+140+48)
19×16=304(100+150+54)
20×16=320(16×20=320)  

என்ன பதினாறாம் வாய்ப்பாடு எளிமையாக இருக்கிறதா?

புதன், 20 மார்ச், 2013

வாய்ப்பாடு-14

இப்போதான் ரொம்ப ரொம்ப முக்கியமான ஒரு ஐடியாவை பார்க்க போறோம்! 11லிருந்து 19 வரைக்கும் எந்த இரண்டு எண்களைக் கொடுத்தாலும் மனசிலேயே கணக்கு போட்டு சொல்லும் ஐடியா அது! வேண்டுமானால் விரல்களையும் துணைக்கு வைத்துக் கொள்ளலாம்! இல்லை என்றால் விட்டு விடலாம்! அது உங்கள் இஷ்டம்! 
1.   10×10=100 மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.
2.   கடைசி இலக்கங்களைக் கூட்டி உடன் பூஜ்ஜியத்தை சேர்க்க வேண்டும்!
3.   கடைசி இலக்கங்களை மட்டும் பெருக்கி கொள்ள வேண்டும்!
4.   மூன்று விடைகளையும் கூட்ட வேண்டும்! அவ்வளவுதான்!
1×14=14(14×1=14)
2×14=28(14×2=28)
3×14=42(14×3=42)
4×14=56(14×4=56)
5×14=70(14×5=70)
6×14=84(14×6=84)
7×14=98(14×7=98)
8×14=112(14×8=112)
9×14=126(14×9=126)
10×14=140(14×10=140)
11×14=154(100+50+4)
12×14=168(100+60+8)
13×14=182(100+70+12)
14×14=196(100+80+16)
15×14=210(100+90+20)
16×14=224(100+100+24)
17×14=238(100+110+28)
18×14=252(100+120+32)
19×14=266(100+130+36)
   20×14=280(14×20=280)  
சுண்டு விரல்-11, மோதிர விரல்-12, நடுவிரல்-13, ஆள்காட்டி விரல்-14, கட்டை விரல்-15.
10×10=100 மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்
நிற்கும் விரலைக் பத்தாக கூட்டி கொள்ள வேண்டும்.
மீண்டும் நிற்கும் விரலையே பெருக்கிக் கொள்ள வேண்டும்!
           11×14=?
100(மனதில் இருப்பது)+50(நிற்கும் விரல்கள்)+4(நிற்கும் விரல்களின் பெருக்குத்தொகை)=154
சுண்டு விரல்-16, மோதிர விரல்-17, நடுவிரல்-18, ஆள்காட்டி விரல்-19, கட்டை விரல்-20 என்றும் கொள்ளலாம்!
 
வாய்ப்பாடு-13

இப்போதான் ரொம்ப ரொம்ப முக்கியமான ஒரு ஐடியாவை பார்க்க போறோம்! 11லிருந்து 19 வரைக்கும் எந்த இரண்டு எண்களைக் கொடுத்தாலும் மனசிலேயே கணக்கு போட்டு சொல்லும் ஐடியா அது! வேண்டுமானால் விரல்களையும் துணைக்கு வைத்துக் கொள்ளலாம்! இல்லை என்றால் விட்டு விடலாம்! அது உங்கள் இஷ்டம்! 
1.   10×10=100 மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.
2.   கடைசி இலக்கங்களைக் கூட்டி உடன் பூஜ்ஜியத்தை சேர்க்க வேண்டும்!
3.   கடைசி இலக்கங்களை மட்டும் பெருக்கி கொள்ள வேண்டும்!
4.   மூன்று விடைகளையும் கூட்ட வேண்டும்! அவ்வளவுதான்!
1×13=13(13×1=13)
2×13=26(13×2=26)
3×13=39(13×3=39)
4×13=52(13×4=52)
5×13=65(13×5=65)
6×13=78(13×6=78)
7×13=91(13×7=91)
8×13=104(13×8=104)
9×13=1117(13×9=117)
10×13=130(13×10=130)
11×13=143(100+40+3)
12×13=156(100+50+6)
13×13=169(100+60+9)
14×13=182(100+70+12)
15×13=195(100+80+15)
16×13=208(100+90+18)
17×13=221(100+100+21)
18×13=234(100+110+24)
19×13=247(100+120+27)
   20×13=260(13×20=260)  
சுண்டு விரல்-11, மோதிர விரல்-12, நடுவிரல்-13, ஆள்காட்டி விரல்-14, கட்டை விரல்-15.
10×10=100 மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்
நிற்கும் விரலைக் பத்தாக கூட்டி கொள்ள வேண்டும்.
மீண்டும் நிற்கும் விரலையே பெருக்கிக் கொள்ள வேண்டும்!
           11×13=?
100(மனதில் இருப்பது)+40(நிற்கும் விரல்கள்)+3(நிற்கும் விரல்களின் பெருக்குத்தொகை)=143
சுண்டு விரல்-16, மோதிர விரல்-17, நடுவிரல்-18, ஆள்காட்டி விரல்-19, கட்டை விரல்-20 என்றும் கொள்ளலாம்!
 
வாய்ப்பாடு-12

இப்போதான் ரொம்ப ரொம்ப முக்கியமான ஒரு ஐடியாவை பார்க்க போறோம்! 11லிருந்து 19 வரைக்கும் எந்த இரண்டு எண்களைக் கொடுத்தாலும் மனசிலேயே கணக்கு போட்டு சொல்லும் ஐடியா அது! வேண்டுமானால் விரல்களையும் துணைக்கு வைத்துக் கொள்ளலாம்! இல்லை என்றால் விட்டு விடலாம்! அது உங்கள் இஷ்டம்! 

1.   10×10=100 மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

2.   கடைசி இலக்கங்களைக் கூட்டி உடன் பூஜ்ஜியத்தை சேர்க்க வேண்டும்!

3.   கடைசி இலக்கங்களை மட்டும் பெருக்கி கொள்ள வேண்டும்!

4.   மூன்று விடைகளையும் கூட்ட வேண்டும்! அவ்வளவுதான்!

1×12=12(12×1=12)

2×12=24(12×2=24)

3×12=36(12×3=36)

4×12=48(12×4=48)

5×12=60(12×5=60)

6×12=72(12×6=72)

7×12=84(12×7=84)

8×12=96(12×8=96)

9×12=108(12×9=108)

10×12=120(12×10=120)

11×12=132(100+30+2)

12×12=144(100+40+4)

13×12=156(100+50+6)

14×12=168(100+60+8)

15×12=180(100+70+10)

16×12=192(100+80+12)

17×12=204(100+90+14)

18×12=216(100+100+16)

19×12=228(100+110+18)

   20×12=240(12×20=240)

சுண்டு விரல்-11, மோதிர விரல்-12, நடுவிரல்-13, ஆள்காட்டி விரல்-14, கட்டை விரல்-15.

10×10=100 மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்

நிற்கும் விரலைக் பத்தாக கூட்டி கொள்ள வேண்டும்.

மீண்டும் நிற்கும் விரலையே பெருக்கிக் கொள்ள வேண்டும்!

           11×12=?

100(மனதில் இருப்பது)+30(நிற்கும் விரல்கள்)+2(நிற்கும் விரல்களின் பெருக்குத்தொகை)=132

சுண்டு விரல்-16, மோதிர விரல்-17, நடுவிரல்-18, ஆள்காட்டி விரல்-19, கட்டை விரல்-20 என்றும் கொள்ளலாம்!

திங்கள், 18 மார்ச், 2013

வாய்ப்பாடு-8

எட்டாம் வாய்ப்பாடு படிக்கலாமா? ஏற்கனவே படித்த ஒன்று முதல் ஐந்து வாய்ப்பாடுகளை மறந்து விடாதீர்கள்.அதுதான் நாம் இந்த வாய்ப்பாடுகளை படிக்க உதவப்போகிறது.கூடவே விரல்களையும் பயன் படுத்த போகிறோம்.நிற்கும் விரல்கள்=பத்துகள்.மடக்கிய விரல்கள்=ஒன்றுகள். சுண்டு விரல்-6, மோதிர விரல்-7, நடுவிரல்-8, ஆள்காட்டி விரல்-9, கட்டை விரல்-10.             நிற்கும் விரல்களுடன், மடக்கிய விரல்களையும், மடக்கிய விரல்களையும் பெருக்கி கூட்டிக் கொள்ளுங்கள்! 10க்கு மேல்10×8=80 என்பதை மனதில் கொண்டு மீதியை பெருக்கி கூட்டிக்கொள்ளுங்கள்!
1×8=8(8×1=8)
2×8=16(8×2=16)
3×8=24(8×3=24)
4×8=32(8×4=32)
5×8=40(8×5=40)
6×8=48(40+8)
7×8=56(50+6)
8×8=64(60+4)
9×8=72(70+2)
10×8=80(80+0)
11×8=88(80+8)
12×8=96(80+16)
13×8=104(80+24)
14×8=112(80+32)
15×8=120(80+40)
16×8=128(80+48)
17×8=136(80+56)
18×8=144(80+64)
19×8=152(80+72)
20×8=160(80+80) எட்டாம் வாய்ப்பாடும் படிச்சாச்சு! ஜாலிதானே?

வாய்ப்பாடு-7

ஏழாம் வாய்ப்பாடு படிக்கலாமா? ஏற்கனவே படித்த ஒன்று முதல் ஐந்து வாய்ப்பாடுகளை மறந்து விடாதீர்கள்.அதுதான் நாம் இந்த வாய்ப்பாடுகளை படிக்க உதவப்போகிறது.கூடவே விரல்களையும் பயன் படுத்த போகிறோம்.நிற்கும் விரல்கள்=பத்துகள்.மடக்கிய விரல்கள்=ஒன்றுகள். சுண்டு விரல்-6, மோதிர விரல்-7, நடுவிரல்-8, ஆள்காட்டி விரல்-9, கட்டை விரல்-10.             நிற்கும் விரல்களுடன், மடக்கிய விரல்களையும், மடக்கிய விரல்களையும் பெருக்கி கூட்டிக் கொள்ளுங்கள்! 10க்கு மேல் 10×7=70 என்பதை மனதில் கொண்டு மீதியை பெருக்கி கூட்டிக்கொள்ளுங்கள்!
1×7=7(7×1=7)
2×7=14(7×2=14)
3×7=21(7×3=21)
4×7=28(7×4=28)
5×7=35(7×5=35)
6×7=42(30+12)
7×7=49(40+9)
8×7=56(50+6)
9×7=63(60+3)
10×7=70(70+0)
11×7=77(70+7)
12×7=84(70+14)
13×7=91(70+21)
14×7=98(70+28)
15×7=105(70+35)
16×7=112(70+42)
17×7=119(70+49)
18×7=126(70+56)
19×7=133(70+63)
20×7=140(70+70) ஏழாம் வாய்ப்பாடு படிச்சாச்சு! ஜாலிதானே?

வாய்ப்பாடு-6

ஆறாம் வாய்ப்பாடு படிக்கலாமா? ஏற்கனவே படித்த ஒன்று முதல் ஐந்து வாய்ப்பாடுகளை மறந்து விடாதீர்கள்.அதுதான் நாம் இந்த வாய்ப்பாடுகளை படிக்க உதவப்போகிறது.கூடவே விரல்களையும் பயன் படுத்த போகிறோம்.நிற்கும் விரல்கள்=பத்துகள்.மடக்கிய விரல்கள்=ஒன்றுகள். சுண்டு விரல்-6, மோதிர விரல்-7, நடுவிரல்-8, ஆள்காட்டி விரல்-9, கட்டை விரல்-10.             நிற்கும் விரல்களுடன், மடக்கிய விரல்களையும், மடக்கிய விரல்களையும் பெருக்கி கூட்டிக் கொள்ளுங்கள்! 10க்கு மேல் 10×6=60,என்பதை மனதில் கொண்டு மீதியை பெருக்கி கூட்டிக்கொள்ளுங்கள்!
1×6=6(6×1=6)
2×6=12(6×2=12)
3×6=18(6×3=18)
4×6=24(6×4=24)
5×6=30(6×5=30)
6×6=36(20+16)
7×6=42(30+12)
8×6=48(40+8)
9×6=54(50+4)
10×6=60(60+0)
11×6=66(60+6)
12×6=72(60+12)
13×6=78(60+18)
14×6=84(60+24)
15×6=90(60+30)
16×6=96(60+36)
17×6=102(60+42)
18×6=108(60+48)
19×6=114(60+54)
20×6=120(60+60) ஆறாம் வாய்ப்பாடு மனப்பாடம் செய்யாமலேயே படிச்சாச்சு! ஜாலிதானே?

வாய்ப்பாடு-5

ஐந்தாம் வாய்ப்பாடு படிக்க பத்தாம் வாய்ப்பாடு தெரிந்தாலே போதும். அதை ஏற்கனவே படிச்சிட்டோம்.அதனால கவலையை விடுங்க! பத்தால் பெருக்கி பாதியாக்கிடுங்க. அவ்வளவுதான்!
1×5=5(10/2)
2×5=10(20/2)
3×5=15(30/2)
4×5=20(40/2)
5×5=25(50/2)
6×5=30(60/2)
7×5=35(70/2)
8×5=40(80/2)
9×5=45(90/2)
10×5=50(100/2)
11×5=55(110/2)
12×5=60(120/2)
13×5=65(130/2)
14×5=70(140/2)
15×5=75(150/2)
16×5=80(160/2)
17×5=85(170/2)
18×5=90(180/2)
19×5=95(190/2)
20×5=100(200/2) நீங்க எந்த எண்ணை ஐந்தால் பெருக்க வேண்டுமென்றாலும் இந்த ஐடியாவை பயன்படுத்தலாம்!

வாய்ப்பாடு-4

இப்போ நான்காம் வாய்ப்பாடு! ஒரு எண்ணுடன் அதே எண்ணை வைத்துக் கூட்டி வரும் விடையுடன் அதே விடையை வைத்துக் கூட்ட வேண்டும்!
1×4=4(1+1=2,2+2=4)
2×4=8(2+2=4,4+4=8)
3×4=12(3+3=6,6+6=12)
4×4=16(4+4=8,8+8=16)
5×4=20(5+5,10+10=20)
6×4=24(6+6=12,12+12=24)
7×4=28(7+7=14,14+14=28)
8×4=32(8+8=16,16+16=32)
9×4=36(9+9=18,18+18=36)
10×4=40(10+10=20,20+20=40)
11×4=44(11+11=22,22+22=44)
12×4=48(12+12=24,24+24=48)
13×4=52(13+13=26,26+26=52)
14×4=56(14+14=28,28+28=56)
15×4=60(15+15=30,30+30=60)
16×4=64(16+16=32,32+32=64)
17×4=68(17+17=34,34+34=68)
18×4=72(18+18=36,36+36=72)
19×4=76(19+19=38,38+38=76)
20×4=80(20+20=40,40+40=80) கிட்டத்தட்ட நாம பாதி கிணறு தாண்டிட்டோம். இதோட சேர்த்து பத்து வாய்ப்பாடு முடிச்சிட்டோம்.ஜோரா கைத்தட்டுங்க!
 
வாய்ப்பாடு-3

எல்லா வாய்ப்பாட்டுக்கும் அடிப்படையில் கூட்டல் தெரிந்திருக்க வேண்டியது ரொம்ப முக்கியம்.சரி மறுபடியும் கை விரல்களைப் பாருங்கள்.அட ஒவ்வொரு விரலாகப் பாருங்கள்! ஒவ்வொரு விரலும் மூன்று மூன்றாக பிரிக்கப் பட்டிருக்கிறதா? எங்க ஒவ்வொரு விரலாக நீட்டி கூட்டி சொல்லிப் பாருங்கள். 10க்கு பிறகு 10×3=30 மனசுல வச்சுக்கோங்க! மீதிய பெருக்கி கூட்டிக்கோங்க. அவ்வளவுதான்!
1×3=3
2×3=6
3×3=9
4×3=12
5×3=15
6×3=18
7×3=21
8×3=24
9×3=27
10×3=30
11×3=33(30+3)
12×3=36(30+6)
13×3=39(30+9)
14×3=42(30+12)
15×3=45(30+15)
16×3=48(30+18)
17×3=51(30+21)
18×3=54(30+24)
19×3=57(30+27)
20×3=60(30+30) அட இந்த ஐடியா நல்லாருக்கேன்னு தோணுதா?முதல் ஐந்து வாய்ப்பாடுதான் எல்லாத்துக்கும் அடிப்படை.அதனால இதை கவனமா பயிற்சி செய்யுங்க!

வாய்ப்பாடு-11

பதினொன்றாம் வாய்ப்பாடு அனைவரும் அறிந்த வாய்ப்பாடு.புதிதாக சொல்ல என்ன இருக்கிறது.1 முதல் 9 வரை அதே எண்ணை இரு முறை போட வேண்டும். பின்பு இரண்டு இலக்கங்களையும் கூட்டி இலக்கங்களுக்கு நடுவில் போட்டுக் கொள்ள வேண்டும்! அவ்வளவுதான்!
1×11=11
2×11=22
3×11=33
4×11=44
5×11=55
6×11=66
7×11=77
8×11=88
9×11=99
10×11=110(1+0 ஐ கூட்டி 10க்கு நடுவில் போட வேண்டும்)
11×11=121(1+1 ஐ கூட்டி 11க்கு நடுவில் போட வேண்டும்)
12×11=132(1+2 ஐ கூட்டி 12க்கு நடுவில் போட வேண்டும்)
13×11=143(1+3 ஐ கூட்டி 13க்கு நடுவில் போட வேண்டும்)
14×11=154(1+4 ஐ கூட்டி 14க்கு நடுவில் போட வேண்டும்)
15×11=165(1+5 ஐ கூட்டி 15க்கு நடுவில் போட வேண்டும்)
16×11=176(1+6 ஐ கூட்டி 16க்கு நடுவில் போட வேண்டும்)
17×11=187(1+7 ஐ கூட்டி 17க்கு நடுவில் போட வேண்டும்)
18×11=198(1+8 ஐ கூட்டி 18க்கு நடுவில் போட வேண்டும்)
19×11=209(1+9 ஐ கூட்டி 19க்கு நடுவில் போட வேண்டும் மீதி1ஐ1உடன் கூட்ட2)
20×11=220(2+0 ஐ கூட்டி 20க்கு நடுவில் போட வேண்டும்) என்ன எளிமையாக இருக்கிறதா?

வாய்ப்பாடு-15

இப்போ நாம படிக்க போறது பதினைந்தாம் வாய்ப்பாடு! ரெண்டாம் வாய்ப்பாட்டில் ஒரு எண்ணை இரட்டிப்பாக்கினோம். இந்த வாய்ப்பாட்டில் ஒரு எண்ணை பாதியாக்கப் போகிறோம்!பின்பு அந்த எண்ணுடனேயே அந்த பாதியை வைத்துக் கூட்டி பத்தால் பெருக்கி விடுங்கள்.அவ்வளவுதான்!
1×15=15(1+0.5=1.5×10)
2×15=30(2+1=3×10)
3×15=45(3+1.5=4.5×10)
4×15=60(4+2=6×10)
5×15=75(5+2.5=7.5×10)
6×15=90(6+3=9×10)
7×15=105(7+3.5=10.5×10)
8×15=120(8+4=12×10)
9×15=135(15+7.5=22.5×10)
10×15=150(10+5=15×10)
11×15=165(11+5.5=16.5×10)
12×15=180(12+6=18×10)
13×15=195(13+6.5=19.5×10)
14×15=210(14+7=21×10)
15×15=225(15+7.5=22.5×10)
16×15=240(16+8=24×10)
17×15=255(17+8.5=25.5×10)
18×15=270(18+9=27×10)
19×15=285(19+9.5=28.5×10)
20×15=300(20+10=30×10) நண்பர்களிடம்  28×15, 36×15 எத்தனை என்று கேட்டு உடனடியாக இதே முறையை பயன்படுத்தி நீங்கள் விடை கூறி அவர்களை அசத்துங்கள்.பதினைந்தால் ஒரு எண்ணைப் பெருக்குவது எத்தனை எளிதாக உள்ளது பார்த்தீர்களா?