வெள்ளி, 24 பிப்ரவரி, 2012

குறுஞ்செய்திகள்-236


என்னவளே
நாணய சேகரிப்புக்கு
நானும் உதவலாமென்றுதான்
அது பற்றி ஆவலாக கேட்டேன்!

அடடா
நீ சேகரிப்பது
புத்தம் புது ரூபாய் நோட்டுகள்
அதுவும் ஆயிரம் ரூபாய் தாள்கள்!


குறுஞ்செய்திகள்-235


என்னவளே
மரத்தில் முற்றி விழுந்த பழங்கள்
சிறகுகள் முளைத்து பறந்த விதைகள்
விலங்குகள் தின்று துப்பிய கொட்டைகள்

அடடா
ஆற்றில் மிதந்து பயணித்த கனிகள்
பறவைகள் சுமந்து பிரசவித்த குழந்தைகள்
முளைத்து மூச்சுவிட அனுமதிக்காத மனிதர்கள்!

குறுஞ்செய்திகள்-234

என்னவளே
நினைத்து பார்க்கும்படி
உருப்படியான செயல்
வாழ்வில் செய்ததுண்டா?என்கிறாய்

அடடா
எப்போது நினைத்தாலும்
எனக்குள் பூத்துக்குலுங்கி
என்னை பரவசமாக்குதடி காதல்!

திங்கள், 20 பிப்ரவரி, 2012

வாழ்த்து மடல்-4


ஞாயிறு, 19 பிப்ரவரி, 2012

வாழ்த்து மடல்-3


வாழ்த்து மடல்-2


வாழ்த்து மடல்-1